ஜெயங்கொண்டம், ஆக. 16: ஜெயங்கொண்டம் நகரில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 78 – வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், கழுமலைநாதர் திருக்கோயில் செயல் அலுவலர் சிவநேயச்செல்வன், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவர் சுமதி சிவகுமார், நகராட்சி துணைத் தலைவர், நகர கழக செயலாளர் வெ.கொ.கருணாநிதி, அறங்காவல் குழு உறுப்பினர் பானுமதி ராஜேந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜமாணிக்கம் பிள்ளை, மீனாட்சி சங்கர், ஆய்வாளர் கேசவன், கணக்கர், கந்தவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.