ஜெயங்கொண்டம், மே 27:ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு நேற்று காலை வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக திரவிய பொடி, மஞ்சள் பொடி, திருநீறு, பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், பால், தயிர் போன்ற 21 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.