கழுகுமலை, அக். 28: கழுகுமலை புனித சூசையப்பர் ஆரம்பப் பள்ளியில் தியான் மருத்துவமனை மற்றும் தியான் பவுண்டேஷன் சார்பில் கை கழுவுதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியை அருள்மலர் தலைமை வகித்தார். தியான் பவுண்டேஷன் தலைமை நிர்வாகி கிருஷ்ண பிரியா முன்னிலை வகித்தார். தியான் தலைமை மருத்துவர் சிவகுமார், கை கழுவுதல் பற்றிய முக்கியத்துவத்தை செயல்முறையாக செய்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பள்ளி குழந்தைகளுக்கு கை கழுவுதல் விழிப்புணர்வு குறித்த நாடகமும், நடனமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாக கை கழுவும் சோப் வழங்கப்பட்டது. இதில் தியான் மருத்துவமனை மருத்துவ குழு மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.