கழுகுமலை, ஆக. 10: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா. நேற்று நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசித்தனர். தென்பழநி என்றழைக்கப்படும் பிரசித்திப் பெற்ற குடவரை கோயிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா, நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 6 மணிக்கு மேல் திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசாந்தி பூஜைநடந்தது. 10 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பல்வேறு விதமான வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு மேல் கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், தலைமை எழுத்தர்கள் மாடசாமி, அருண் மற்றும் கோயில் ஊழியர்கள், சீர்பாத தாங்கிகள் செய்திருந்தனர்.