கழுகுமலை, நவ. 18: கழுகுமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை கடம்பூர் ராஜூ எம்எல்ஏ திறந்து வைத்தார். கழுகுமலை பேரூராட்சி 6வது வார்டுக்குட்பட்ட பாலசுப்பிரமணியம் தெருவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹10 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தலைமை வகித்து ரிப்பன் வெட்டி சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், அனைத்திந்திய எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் சத்யா, கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் தர், எம்ஜிஆர் இளைஞரணி ஒன்றிய செயலாளர் அம்பிகை பாலன் மற்றும் கோபி, வள்ளிநாயகபுரம் கிளை செயலாளர் பாலமுருகன், செட்டிக்குறிச்சி கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.