மண்டபம்,செப்.3: மண்டபம் பேரூராட்சியில் நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதுபோல 100க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், அரசு அலுவலகங்கள் உள்பட வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் வீடுகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் வசித்து வரும் பொதுமக்களின் மனித கழிவுகளை அகற்றுவதற்கு தனியார் நிறுவனங்கள் அதிகமான கட்டண தொகைகளை பொதுமக்களிடம் வசூலித்து வருகின்றனர். இதனால் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து பேரூராட்சி ஆணையரிடமும், பேரூராட்சி தலைவரிடமும் பொதுமக்களின் பொருளாதார சிரமம் குறித்து முறையிட்டனர். இதன் பின்னர் பேரூராட்சி சார்பாக மனித கழிவுகளை அகற்றி ஏற்றி செல்வதற்கு புதிய வாகனம் வாங்க வேண்டும் என பல நாள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் பேரில் பல லட்சம் மதிப்பில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 4000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மினி லாரி வாகனத்தை பேரூராட்சி நிர்வாகம் கடந்த வாரம் மத்திய, மாநில அரசின் நிதி திட்டத்தில் வாங்கப்பட்டது. இந்த வாகனத்தில் ஒரு நடைக்கு மனித கழிவுகளை அகற்றி செல்ல ரூ.1500 என கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இந்த வாகனம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த வாரத்தில் அர்ப்பணிக்க பேரூராட்சி நிரவாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கழிவுகளை அகற்ற புதிய வாகனம்
previous post