கரூர், ஆக. 19: கள உதவியாளர் பணியிடங்களை ஐடிஐ படித்தவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்று கரூரில் நடந்த மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் வட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் வட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.கரூரில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு வட்ட தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி கதிர்வேல் வரவேற்றார்.
பொருளாளர் எட்வின் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.மாநில தலைவர் கண்ணன், பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர்.பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும், தொழிலாளர் நல சட்டங்களை பாதுகாத்திட வேண்டும், அதிக வேலைப்பளு திணிப்பதை கைவிட வேண்டும், இழந்த சலுகைகளை திரும்ப வழங்கிட வேண்டும், கள உதவியாளர் பணியிடங்களை ஐடிஐ படித்தவர்களை கொண்டு நிரப்பிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் இந்த வட்ட பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.