ஈரோடு,மே31: ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை போலீசார் நேற்று முன் தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, குறிச்சி அருகே உள்ள கீரிக்காடு தோட்டம் பகுதியில் ஒருவர் அரசால் தடைசெய்யப்பட்ட கள் விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர், ராமச்சிபாளையத்தை சேர்ந்த குமார் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 3 லிட்டர் பனைமரக் கள்ளையும் பறிமுதல் செய்தனர்.
கள் விற்றவர் கைது
0
previous post