வேலூர், ஜூலை 1: ஆந்திராவில் இருந்து வேலூருக்கு பைக்கில் கள் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலத்திலிருந்து வேலூருக்கு கள், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க மதுவிலக்கு தடுப்பு பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கிறிஸ்டியான்பேட்டை வாகன சோதனைச் சாவடியில் கலால் பிரிவு எஸ்ஐ சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டபோது கேனில் 20 லிட்டர் கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் கள்ளுடன் வந்த வாலிபர் வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த அருண்குமார்(27) என்பதும், கள்ளை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பொம்மசமுத்திரத்திலிருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீசார் கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிந்து அருண்குமாரை கைது செய்தனர்.
கள் கடத்திய வாலிபர் கைது ஆந்திராவில் இருந்து வேலூருக்கு
0