பல்லடம்,செப்.1: பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி தொட்டம்பட்டி கிராமத்தில் ஒரு தோட்டத்தை பொங்கலூர் அய்யப்பா நகரை சேர்ந்த சரவணன் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இவரது வீட்டில் சோதனை செய்த போது ஒற்றைக் குழல் நாட்டுத் துப்பாக்கி மற்றும் 3 ஏர்கன் துப்பாக்கிகள் இருந்ததும் அதனைப் பயன்படுத்தி பறவைகள் மற்றும் முயல்களை வேட்டையாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து சரவணனை கைது செய்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மீண்டும் அந்த தோட்டத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது அங்குள்ள தென்னை மரங்களில் கள் இறக்குவதற்காக பானைகள் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் தென்னை மரங்களுக்கு இடையே கயிறு கட்டி இருந்தது. இந்தக் கயிறு மூலம் ஒரு தென்னை மரத்திலிருந்து மற்றொரு தென்னை மரத்திற்கு செல்ல முடியும். இதையடுத்து தென்னை மரங்களில் கட்டப்பட்டிருந்த கயிறுகள் மற்றும் பானைகளை போலீசார் அகற்றினர்.