மதுரை, மே 31: கள்ளழகர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.55 லட்சம் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை கோயிலில் உள்ள உண்டியல்கள் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு பக்தர்கள் வழங்கிய காணிக்கை பொருட்கள் எண்ணும் பணி கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 55 லட்சத்து 40 ஆயிரத்து 624 ரொக்கமும், தங்கம் 19 கிராமும், வெள்ளி 340 கிராமும் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் திறப்பின் போது கோயில் துணை ஆணையர் யக்ஞ நாராயணன், கூடலழகர் பெருமாள் கோயில் உதவி ஆணையர் பிரதீபா, ஆய்வர் சாவித்திரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.