விழுப்புரம், ஜூன் 14: கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை சரமாரியாக தாக்கிய கணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா(33). கடந்த 2017ம் ஆண்டு ராஜலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். விழுப்புரம் நகை கடை ஒன்றில் ராஜா விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நகை கடையில் பணிபுரியும் ஒரு பெண்ணிடம் ராஜாவுக்கு தொடர்பு இருந்ததை அறிந்த ராஜலட்சுமி கணவரிடம் தட்டி கேட்டுள்ளார். இதானல் ஆத்திரமடைந்த ராஜா, என்னை எப்படி நீ கேட்கலாம் என்று கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். மேலும் 50 பவுன் நகையை வரதட்சணையாக வாங்கிக் கொண்டு வருமாறும் கொழுந்தனார் சவுந்தர் என்பவர் வீட்டை விட்டு வெளியே போ எனக் கூறி அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜலட்சுமி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ராஜா மீது விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவிக்கு கத்திக்குத்து
60
previous post