ஜெயங்கொண்டம், ஆக.2: உடையார்பாளையம் போலீஸ் எஸ்ஐ திருவேங்கடம் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து உடையார்பாளையம் எல்லைக்கல் தெருவை சேர்ந்த பழனியாண்டி மகன் சாமிநாதன்(74) என்பவர் வீட்டில் சோதனை செய்தனர். அதில் அவர் வீட்டின் பின்புறம் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் சாமிநாதனை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.