பரமத்திவேலூர், ஆக.2: பரமத்திவேலூர் அடுத்துள்ள கொந்தளம் கிராமம் காந்தி நகரை சேர்ந்தவர் சின்னதுரை. அவரது மனைவி சுதா(45). சின்னதுரை உயிரிழந்த நிலையில், சுமதி அதே பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தார். அவரை வேலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், ஜூன் மாதம் 20ம் தேதி சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கபட்ட சுதாவை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், கலெக்டர் உமா, சுதாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து, வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி குண்டர் சட்டத்தில் சுதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளச்சாராய வியாபாரி மீது குண்டாஸ் பாய்ந்தது
46
previous post