நாமகிரிப்பேட்டை, செப்.21: நாமகிரிப்பேட்டை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில், கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக, நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்ற போது, தொப்பம்பட்டியைச் சேர்ந்த நித்தியானந்தம்(35) என்பவர் வீட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் வருவதை அறிந்த அவர் தப்பி ஓட முயன்றார். அவரை கைது செய்த போலீசார், வீட்டின் குளியலறையில் போட்டிருந்த 130 லிட்டர் ஊறலை கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த 40 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளச்சாராயம் விற்ற நபர் கைது
previous post