வேலூர், ஜூலை 24: பள்ளிகொண்டா, விரிஞ்சிபுரம், பரதராமியில் கள்ளச்சாராயம், மணல் கடத்திய 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த வரதலம்பட்டு பகுதியைச் சேர்ந்த நடராஜன் (28) என்பவரை பள்ளிகொண்டா போலீசார் கைது செய்தனர். இதேபோல் விரிஞ்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த வாழபந்தல் கிராமத்தை சேர்ந்த கார்த்தி (21) என்பவரை விரிஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர். பரதராமி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த குடியாத்தம் பெரியண்ணா நகரை சேர்ந்த ரமேஷ் (30) என்பவரை பரதராமி போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சுப்புலட்சுமிக்கு, எஸ்பி மணிவண்ணன் பரிந்துரை செய்தார். இதையடுத்து 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இதற்கான ஆணைகளை அந்தந்த இன்ஸ்பெக்டர்கள் வேலூர் மத்திய சிறையில் வழங்கினர்.
கள்ளச்சாராயம், மணல் கடத்திய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது கலெக்டர் உத்தரவு பள்ளிகொண்டா, விரிஞ்சிபுரம், பரதராமியில்
56