மார்த்தாண்டம், ஜூன் 27: களியக்காவிளையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் கனிமவளம் கடத்த முயன்ற 3 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த லாரியில் இருந்த டிரைவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
களியக்காவிளை போலீசார் நேற்று முன் தினம் நள்ளிரவு கடுகுவாக்குழி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் அந்த வழியாக வரிசையாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். ஒரு லாரியில் ரூ.26 ஆயிரம் மதிப்புள்ள 33 யூனிட் எம் சாண்ட் இருந்ததை கண்டுபிடித்தனர்.
லாரியில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, டிரைவர் கேரள மாநிலம் பாறசாலை மாத்திரக்காவிளையை சேர்ந்த சுதீஷ் (26), கிளீனர் பாறசாலையை சேர்ந்த ஜேம்ஸ் (24) மற்றும் லாரி உரிமையாளர் பத்திரியோடு பகுதியை சேர்ந்த பிரமோத் (34) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்த அனுமதிச்சீட்டை வாங்கி போலீசார் பரிசோதித்தனர். அதில் தூத்துக்குடி கயத்தாறு பகுதியில் இருந்து லாரியில் ஜல்லி ஏற்றிக்கொண்டு அடைக்காக்குழி பகுதிக்கு கொண்டு செல்வதற்காக அனுமதிச்சீட்டு பெற்றிருந்த நிலையில், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக கேரள மாநிலத்துக்கு கடத்தி சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.
களியக்காவிளையில் கேரளாவுக்கு ஜல்லி, எம்.சாண்ட் கடத்த முயன்ற 3 டிப்பர் லாரிகள் பறிமுதல் 4 பேர் கைது
0
previous post