Sunday, March 3, 2024
Home » களரம்பட்டி கிராமத்தில் குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

களரம்பட்டி கிராமத்தில் குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

by Ranjith

 

பெரம்பலூர்,ஜன.5: பெரம்பலூர் அருகே களரம்பட்டி கிராமம் 9வது வார்டில் சரியாக குடிநீர் வரவில்லை என்று காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட களரம்பட்டி கிராமத்தில் மத்திய அரசின் துது (ஜல் ஜீவன்) திட்டத்தின் மூலம் பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அனைத்து பகுதிகளுக்கும் 20 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே குடி தண்ணீர் ஒரு நாள்விட்டு ஒருநாள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் களரம்பட்டி ஊராட்சியின் 9வது வார்டில் சரியாக குடி தண்ணீர் வரவில்லை எனக் கூறி நேற்று காலை 9வது வார்டு பொது மக்கள் காலை 7 மணியளவில் பெரம்பலூர்- துறையூர் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து தங்களுக்கு வழக்கம் போல் 1 மணி நேரம் குடி தண்ணீர் வழங்க வேண் டும் எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் களரம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சுதாகர் மற்றும் தகவலறிந்து அங்கு வந்த நெடுஞ்சாலை ரோந்துப் பணி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அரசின் துது திட்டத்தின் மூலம் பைப் லைன் போடும் பணி முடிந்தவுடன் வழக்கம் போல் குடிதண்ணீர் வழங்கப்படும் என ஊராட்சி மன்றத் தலைவர் உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

fifteen − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi