களக்காடு, ஆக.27: களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி நவநீத கிருஷ்ணர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து நவநீதகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் வாகனத்தில் எழுந்தருளியதும் வீதியுலா நடந்தது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர். இதேபோல களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.