களக்காடு,ஆக.13: களக்காடு எஸ்ஐ பழனி தலைமையில் போலீசார் அண்ணா சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனையிட்டனர். இதில் அவர் நாகன்குளம் கீழத்தெருவை சேர்ந்த கணேசனின் மகன் மதன் (25) என்பதும் 50 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிந்து மதனை கைதுசெய்தனர்.