களக்காடு, அக்.20: களக்காடு அருகே வாழைகளை வெட்டி சேதப்படுத்திய தம்பதி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். களக்காடு அருகே பத்மநேரி மருதப்பர் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மகன் வானுமாமலை (55). விவசாயியான இவருக்கும், இவரது அண்ணன் சங்கரன் (57) என்பவருக்கும் சொத்து தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் வானுமாமலையின் வயலில் பயிரிட்டிருந்த 550 வாழைகளை சம்பவத்தன்று சங்கரன் அவரது மனைவி பார்வதி என்ற லட்சுமி (53), இவர்களது மகன் வேல்முருகன் (30) ஆகி. மூவரும் சேர்ந்து, வெட்டியும், பிடுங்கியும் அழித்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து வானுமாமலை களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சங்கரன் உள்ளிட்ட 3 பேர் மீதும் எஸ்ஐ ரங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.