களக்காடு,மே 18: களக்காடு அருகே சிங்கிகுளம் பெத்தானியாவை சேர்ந்தவர் ஜான் மகன் சமுத்திரபாண்டி. விவசாயியான இவர் சம்பவத்தன்று இரவில் தனது பைக்கை வீட்டு அருகே உள்ள மாட்டு தொழுவத்தில் நிறுத்தியிருந்தார். மறுநாள் அதிகாலையில் வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதேபோன்று சங்கரன்கோவில் காந்திநகர் 2வது தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (32). இவர் களக்காடு அருகே கருவேலங்குளத்தில் தங்கியிருந்து வாழை நார் உறிக்கும் பணி செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த அவரது பைக்கையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அவர்கள் களக்காடு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்கு பதிவு செய்து பைக்குகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றார்.
களக்காடு அருகே பைக்குகள் திருட்டு
79
previous post