களக்காடு, ஆக. 3: களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தங்க செல்வம் முன்னிலையில் நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டில் சோதனையிட்டதில் எந்தவித அனுமதிகளும் பெறாமல் சுகாதாரமற்ற முறையில் குளிர்பான பாக்கெட் தயாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட 200, குளிர்பான பாக்கெட்டுகள், மற்றும் தயாரிப்பு பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுசம்பந்தமாக வீட்டின் உரிமையாளருக்கு ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பெட்டிக்கடைகளில், போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என்றும் சோதனை நடத்தப்பட்டது.
களக்காடு அருகே சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 200 குளிர்பான பாக்கெட்டுகள் அழிப்பு
previous post