களக்காடு, அக்.4: களக்காடு அருகே எஸ்.என். பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். தொழிலாளி. இவரது மகன் கபின் (4), சாலைப்புதூரில் உள்ள பாலர் பள்ளியில் படித்து வந்தான். இந்நிலையில் சிறுவன் அங்குள்ள சேரன்மகாதேவி- பணகுடி சாலையை நேற்று கடக்க முயன்றான். அப்போது அவ்வழியாக குமரி மாவட்டம், வில்லுக்குறியைச் சேர்ந்தவரும், பத்மநேரி பள்ளி ஆசிரியருமான எப்ரேம்ராய் (57) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கபின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். தகவலறிந்து விரைந்து வந்த களக்காடு இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த எப்ரேம்ராய் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.