தேவகோட்டை, பிப்.24: தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2023-2024-ம் கல்வி ஆண்டில் கல்வி இணை, கல்வி சாரா மன்ற செயல்பாடுகள், வினாடி-வினா போட்டிகள் நடைபெற்று மாநில அளவில் 52 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த போட்டியில் சிறார் திரைப்படம், திரைக்கதை விமர்சனம் என்ற தலைப்பில் தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவி எப்சிபா வெற்றி பெற்றார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற 52 மாணவ-மாணவிகளை பள்ளி கல்வித்துறை சார்பில் மலேசியா நாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்ன்றனர். கல்விசுற்றுலா செல்லும் கண்ணங்குடி அரசு பள்ளி மாணவி எப்சிபாவை தலைமை ஆசிரியர் பாக்கியம், ஆசிரியர்கள் அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் பாராட்டினர்.