தேனி, ஆக. 12: ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் 60ம் ஆண்டு துவக்கத்தையடுத்து வாடிக்கையாளர்களுக்கு ரூ.6 கோடி மதிப்பிலான பரிசுகைளை வழங்குவதாக அறிவித்தது. இதனையடுத்து தேனி ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் பரிசுகள் வழங்கும் விழாவினை பூதிப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பிருந்தாதேவி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் போது தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக சிஎஸ்ஆர் முறையின் மூலம் ரூ.86 ஆயிரத்து 100 மதிப்பிலான உபகரணங்கள் வாங்க பள்ளி உதவி தலைமை ஆசிரியை கலையரசியிடம் காசோலை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவன மேலாளர் தேவராஜ், கணக்காளர் சோபின் மற்றும் நிறுவன ஊழியர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.