தொண்டி, ஜூன்2: தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் திட்ட அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்சி திட்ட அலுவலர் வளர்மதி, வேல்டு விசன் திட்ட அலுவலர் ஜெயலெட்சுமி முன்னிலை வகித்தனர்.
202 குழந்தைகளுக்கு சோப்பு உள்ளிட்ட கை கழுவும் உபகரணங்கள், 89 குழந்தைகளுக்கு விதை பை, 4 குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.இதுவேல்டு விசன் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதில் தொண்டி எஸ்.ஐ. சுப்பையா, நம்புதாளை சிபிஓ கமிட்டி தலைவர் கண்ணன், சின்னப்பராஜ், குழந்தைகள் நல அலுவலர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.