மன்னார்குடி: தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் 6 முதல் 12 வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் நேற்று தொடங்கின. அரசுப் பள்ளி மாணவர்களின் கலைத் திறன்களை வளர்த்தெடுக்கவும், தமிழர் களின் பண்டைய கலாச்சார கலை வடிவங்களை மீட்டெடுக்கவும் தமிழக அர சின் பள்ளிக் கல்வித் துறையானது கடந்த ஆண்டில் இருந்து கலைத் திரு விழா போட்டிகளை நடத்தி வருகிறது. கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள நடுநிலை உயர்நிலை மேல் நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டி கள் மூன்று பிரிவுகளாக கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் அக்டோபர் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை 4 நாட்கள் நடை பெறுகிறது கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள 45 பள்ளிகளில் 6 – 8 வகுப்பில் 33 போட்டி களும், 9 மற்றும்10 வகுப்பில் 81 போட்டிகளும்,11 மற்றும. 12, வகுப்பில் 74 போட்டிகளும் என 188 போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வட்டார அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.