வேதாரண்யம்: வேதாரண்யம் வடக்கு வீதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை ரத்து செய்து சிறை தண்டனை ஆகியவற்றை நீதிமன்றம் உறுதிப்படுத்தியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னாள் எம்பி பி.வி.ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போஸ், மாவட்ட வர்த்தக அணி அப்துல் ஹுசைன், முன்னாள் நகரத் தலைவர் வைரம், சிறுபான்மை பிரிவு சோட்டா பாய், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் ஆப்கான், மகளிரணி செல்வராணி, நகர துணைத்தலைவர் மெய்யா ரபீக், உப்புத் தொழிலாளர்கள் சங்க துணைத்தலைவர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.