சாத்தூர், செப்.18: சாத்தூரில் கல்லூரி விடுதியில் இருந்து மாயமான மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். சாத்தூர் கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கு சாத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் தங்கி பி.காம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவர் கடந்த 13ம் தேதி கல்லூரி விடுதியில் இருந்து மாயமாகியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.