Monday, February 26, 2024
Home » கல்லூரி மாணவி, 2 சிறுவர்கள் மாயம்

கல்லூரி மாணவி, 2 சிறுவர்கள் மாயம்

by Francis

 

தர்மபுரி, ஜன.26: தர்மபுரி வெண்ணாம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு சர்வேஸ்வரன்(9), சஞ்சய்(7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். திருமுருகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். குள்ளனூரில் உள்ள அரசு பள்ளியில் சர்வேஸ்வரன் 4ம் வகுப்பும், சஞ்சய் 2ம் வகுப்பும் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை, விளையாடி விட்டு வருவதாக சர்வேஸ்வரன், சஞ்சய் ஆகியோர் வீட்டில் கூறி விட்டுச் சென்றனர். பின்னர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்காததால், மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில், தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், கடத்தூர் அருகே நல்லகுட்லஹள்ளி நடூர் கிராமத்தைச் சேர்ந்த காசி மகள் பிரியதர்ஷினி(21). இவர், நல்லம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாமாண்டு படித்து வருகிறார். கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரியதர்ஷினி, மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், கடத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

thirteen − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi