பாப்பிரெட்டிப்பட்டி, ஆக. 29: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, இருளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (57). இவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ரித்திகா(18), சேலத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வந்தார். இதனிடையே, ரித்திகா கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்த அனைவரும் சாப்பிட்டு விட்டு உறங்கினர். காலையில் எழுந்து பார்த்த போது, ரித்திகாவை காணவில்லை. உறவினர் வீடுகளில் விசாரித்தும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பள்ளிப்பட்டி போலீசில் முருகேசன் புகார் அளித்தார். இதன் பேரில், வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கல்லூரி மாணவி மாயம்
previous post