திருச்சி, ஏப்.25: திருச்சியில் நேற்று நடைபெற்ற ஓபிஎஸ் அணி மாநாட்டையொட்டி அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நேற்று மாலை ஓபிஎஸ் அணி மாநாடு நடந்தது. இதனையொட்டி பிராட்டியூர் ஆர்டிஒ ஆபிஸ் பகுதியில் திண்டுக்கல் சாலையில் ஓபிஎஸ்சை வரவேற்று பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. உரிய அனுமதியின்றி பேனர் வைத்தது குறித்து செசன்ஸ் கோர்ட் போலீஸ் எஸ்ஐ மோகன் அளித்த புகாரின்பேரில் போலீசார் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்