ராமநாதபுரம், செப்.1: ராமநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு பேச்சு போட்டி மாவட்ட அளவில் நடைபெற்றது. இந்த போட்டியில் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை மாணவி நிலோஃபர் நிஷா, தமிழ்த்துறை மாணவி பாத்திமா பலிஹா, தகவல் தொடர்பியல் துறை மாணவி நஜீபா, வேதியியல் துறை மாணவி ஜம்ரியா, நுண்ணுயிரியல் துறை மாணவி நூரூல் அசிலா ஆகிய மாணவிகள் அனைவரும் தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசினை பெற்றார்கள். இக்கல்லூரி மாணவிகள் அனைவரும் அடுத்து மண்டல அளவில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியிலும் பங்கேற்கிறார்கள். பேச்சுப் போட்டியில் வெற்றியடைந்த மாணவிகளுக்கும், கல்லூரி கலைப் பண்பாட்டு குழுவின் பேராசிரியர்களுக்கும் கல்லூரியின் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, செய்யது அம்மாள் மருத்துவமனையின் மருத்துவர் சானாஸ் பரூக் அப்துல்லா, கல்லூரியின் முதல்வர் முனைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினார்கள்.
கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு
previous post