திருச்சி, ஆக.26: திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுகை, ஆகிய 8 மாவட்டங்களில் இனைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான மாணவியர்களுக்கான செஸ் போட்டி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது. 6 சுற்றுகள் கொண்ட செஸ் போட்டியில் 30 கல்லூரிகளில் இருந்து 150க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். மாணவியர்கள் பிரிவில் பிஷப் ஹீபர் கல்லூரி முதல் இடத்தையும் ஹோலிகிராஸ் கல்லூரி இரண்டாவது இடத்தையும், நாகை, இஜிஎஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூன்றாவது இடத்தையும், பிடித்தது.
பிஷப் ஹீபர் கல்லூரியை சேர்ந்த கிருபா, நாகை, இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சத்யப்ரியா, ஹோலிகிராஸ் கிராஸ் கல்லூரியை சேர்ந்த சக்தி ஶ்ரீ,, திருவாரூர், திரு. வி. கா. கலைக் கல்லூரியை சேர்ந்த சுவாதி, தஞ்சை, மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியை சேர்ந்த ஷர்மிளா, கரூர், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த பூமிகா ஆகிய 6 மாணவியர்களும் த தென்மண்டல அளவிலான பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான செஸ் போட்டியில் பங்கேற்க நடைபெற்ற தகுதி பெறும் தேர்வில் தேர்ந்தெடுக்கபட்டனர்.