கோபி, ஜூன் 7: ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் நாய்க்கர் வீதியை சேர்ந்த மூர்த்தி மகன் மவுலி சங்கர்(18). இவர், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். கல்லூரி விடுமுறையால் வீட்டில் மவுலி சங்கர் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டில் சாமி அறையில் மவுலி சங்கர் தாழிட்டு, தூக்குபோட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்துள்ளார்.
இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் மவுலி சங்கரை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு மவுலி சங்கர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாபுதூர் போலீஸ் ஸ்டேஷனில் மவுலி சங்கரின் தந்தை மூர்த்தி அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிந்து, மவுலி சங்கரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.