திருத்துறைப்பூண்டி, மார்ச் 27: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக திருத்துறைப்பூண்டி நகராட்சியின் கசடு கழிவு, நெகிழி கழிவு மேலாண்மைக் கூடத்தில் அதன் செயல்பாடுகள் குறித்த களப்பயிற்சி நடைபெற்றது.நகர் மன்றத் தலைவர் கவிதா பாண்டியன், இதன் கட்டமைப்பையும் நெகிழி, கசடு கழிவு மேலாண்மைக் குறித்த அவசியத்தையும் எடுத்துரைத்தார். ஆணையர் துர்கா எதிர்காலத் காலத்தில் கசடு கழிவு திட்டம் என்பது தவிர்க்க முடியாதது இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். சுகாதார ஆய்வாளர் மாரிச்சாமி கழிப்பறை கழிவு என்பது நேரடியாக மண்ணில் கலந்தால் குடிநீர் நச்சு நீராக மாறும் என்றும், பல்வேறு தொற்றுகளையும் உடல் நல சீர்கேடுகளையும் உண்டாக்கும் என்றும், எனவே அனைவரும் கசடு கழிவை பொது இடங்களில் ஊற்றாமல் மேலாண்மை செய்யலாம். மேலும் இக்கழிவு நீரைச் சுத்திகரிக்க வெட்டிவேர், கற்றாழை போன்ற தாவரங்களை வளர்த்தும் இயற்கையாக மேலாண்மை செய்ய முடியும் என்றார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள். பன்னீர் செல்வம், நந்தினி மற்றும் பாலம் செந்தில்குமார் ஒருங்கிணைத்தனர்.
கல்லூரி மாணவர்களுக்கு கழிவு மேலாண்மை குறித்து களப்பயிற்சி
0