கிருஷ்ணகிரி, நவ.22: விழுப்புரம் மாவட்டம், ஆலம்பாடியைச் சேர்ந்தவர் சுகுமாரன்(19). இவர், திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., முதலாமாண்டு படித்து வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கியிருந்து, விளையாட்டு பயிற்சி பெற்று வரும் சுகுமாரன், தினமும் அங்கிருந்து கல்லூரிக்கு சென்று வருகிறார். இநேற்று முன்தினம் காலை 8 மணியளவில், சுகுமாரன் விடுதியில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்து, சுகுமாரனிடம் பேச்சு கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனிடையே, சுகுமாரன் அங்கு வைத்திருந்த செல்போனை காணவில்லை. விடுதி முழுவதும் தேடியும் கிடைக்காததால், பயிற்சியின் போது வந்து சென்ற மர்ம வாலிபர் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி அவர் அளித்த புகாரின் பேரில், தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கல்லூரி மாணவரிடம் செல்போன் திருட்டு
0