சாத்தூர், ஜூன் 26: சாத்தூர் அருகே மாயமான கல்லூரி பேராசிரியையை போலீசார் தேடி வருகின்றனர்.
சாத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண் சாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஜூன் 23ம் தேதி காலை 8 மணிக்கு கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றார். ஆனால் நேற்று வரை வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.மாயமாகியுள்ள மகளை கண்டுபிடித்து தருமாறு சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் தந்தை புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.