வந்தவாசி, ஆக. 24: வந்தவாசி அருகே கல்லூரிக்க சென்ற மாணவி கடத்தப்பட்டாரா என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் அரசு கலைக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 21ம் தேதி அன்று கல்லூரிக்கு செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டுச் சென்ற மாணவி அன்று மாலை வீடு திரும்ப வில்லையாம். இதனால் தெரிந்தவர்கள், உறவினர்கள், தோழிகள் வீட்டில் தேடியும் மாணவி கிடைக்காததால் மாணவியின் தந்தை நேற்று வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குப்பதிவு செய்து மாணவி கடத்திச் செல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரிக்கு சென்ற மாணவி கடத்தலா? போலீஸ் விசாரணை வந்தவாசி அருகே
previous post