கோவை, செப். 16: டாக்டர். எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித் துறை சார்பாக எஸ்என்எஸ் கலர்ஸ் டிராபி என்ற கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கூடைப்பந்து முதன்மை போட்டி கடந்த 12ம் தேதி அக்கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடந்த இந்தப் போட்டியில் எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனத்தின் தலைவர், எஸ்.என்.சுப்ரமணியன், தாளாளர் எஸ்.ராஜலெட்சுமி, தொழில்நுட்ப இயக்குனர் எஸ். நலின் விமல் குமார், தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் மற்றும் கல்லூரியின் முதல்வர் அனிதா, துணை முதல்வர் நரேஷ் குமார், டீன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.