அம்பை, செப்.5: கல்லிடைக்குறிச்சி அருகே முன்விரோதத்தில் அரிவாளால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கல்லிடைக்குறிச்சி அருகே கீழவைராவிகுளத்தை சேர்ந்தவர் மாடசாமி (38). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த வசந்த கோபி (24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாடசாமி கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வசந்த கோபி அவரை வழிமறித்து அவதூறாக பேசி அரிவாளால் தாக்கினார். இதில் மாடசாமி காயமடைந்தார். இதுகுறித்து அவர் கல்லிடைக்குறிச்சி போலீசில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்கு பதிவு செய்து வசந்த கோபியை கைது செய்தார்.