அம்பை, நவ.17: கல்லிடைக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு உதவிகள் செய்துள்ளனர். இந்த ஆண்டு குழந்தைகள தினத்தை முன்னிட்டு ரூ.35 ஆயிரம் மதிப்பிலான குடிதண்ணீர் டேங்க் அமைத்து தரப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஓய்வு ஆசிரியர் மீனாள் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் தக்கரை பீர்முகம்மது, அகிலா, விஜி, திருமலை அழகிய நம்பி, செய்யது அலி பாத்திமா, அப்துல் காதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கல்லிடைக்குறிச்சி அரசு பள்ளிக்கு குடிநீர் வசதி
0