சிவகங்கை, ஆக. 28: சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஜூலை 11 முதல் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முகாம்கள் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் நாளை சாக்கோட்டை வட்டாரத்திற்குட்பட்ட சங்கராபுரம் கிராமத்திற்கு சங்கராபுரம், பெரியார் நகர் 6வது தெரு, பெருச்சியம்மன் கோவில் அருகில் உள்ள சமுதாயக்கூடத்திலும், கல்லல் வட்டாரத்திற்குட்பட்ட கம்பனூர், கண்டரமாணிக்கம், கீழப்பட்டமங்கலம், மேலபட்டமங்கலம்,
என்.கீழையூர், என்.மேலையூர், செவரக்கோட்டை, வெளியாத்தூர் ஆகிய கிராமங்களுக்கென கண்டரமாணிக்கம், காமாட்சி ஆச்சி திருமண மண்டபத்திலும் மற்றும் திருப்பத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட கீழச்சீவல்பட்டி, குமாரப்பேட்டை, வடக்கு இளையாத்தங்குடி, தெற்கு இளையாத்தங்குடி, ஆவனிப்பட்டி, விராமதி, செவனிப்பட்டி, ஆத்திரம்பட்டு ஆகிய கிராமங்களுக்கு கீழச்சீவல்பட்டி, ஏஎஸ்சி திருமண மண்டபத்திலும் முகாம்கள் நடைபெறவுள்ளது. முகாம்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறும். இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.