தஞ்சாவூர்: தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக் கழக பொது ஆய்வுக் குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். கல்லுரி முதல்வர் ஜான் பீட்டர், பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினரான ஆய்வுக்குழு தலைவர் சுகுனா லட்சுமி, பல்கலைக் கழக பேராசிரியர்கள் இமானுவேல் ராஜன் மற்றும் லட்சுமி பிரபா, பல்கலைக் கழக அலுவலர் ஞான ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.