சிவகங்கை: மகளிருக்கான கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஏதேனும் ஒரு துறையில் துணிவு மற்றும் வீர சாகசச் செயல்புரிந்த மகளிருக்கான கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம். விருதுடன், ரூ.5,00,000 ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.
விருதினை பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட, 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பம், விரிவாக தன்விவரக்குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து, விண்ணப்பங்களை வருகின்ற 16.06.2025 மாலை 5 மணிக்குள் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும் என தெரிவித்துள்ளார்.