சிவகங்கை, ஆக.23: சிவகங்கையில் தமிழ்நாடு கலை இலக்கிய சங்கத்தின் கலை இலக்கிய பண்பாட்டு இரவு நடைபெற்றது. பொறியாளர் பாண்டிவேல் தலைமை வகித்தார். வரவேற்பு குழு தலைவர் ஒமேகா கண்ணன் வரவேற்றார். சிவகங்கை நகர்மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன் தொடங்கி வைத்தார். கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு மாநில பொதுச்செயலாளர் சங்கர சுப்பிரமணியன், மாநில தலைவர் காயத்ரி மகதி பரிசு வழங்கினர். மக்களுக்காக சமூக சேவையாற்றியவர்கள், 10ம் வகுப்பு 12ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மதுரை சந்திரன், சிவகங்கை வெண்மணி கலைக்குழு உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாநில செயலாளர் செல்வகுமார், மாவட்ட செயலாளர் குணசேகரன், தமிழாசிரியர் இளங்கோ, மாவட்ட தலைவர் தோழர் சரோஜினி, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ரத்தினம் நன்றி கூறினார்.