காரைக்குடி, செப். 7: காரைக்குடியில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. காரைக்குடியில் உள்ள பள்ளியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கலைஞர் எழுதிய கவிதைகள் மற்றும் கலைஞர் எழுதிய திரைப்பட வசனம் ஒப்புவித்தல் போட்டிகள் நடந்தது. கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு வரவேற்றார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பரிசு வழங்கினார். நகராட்சி சேர்மன் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தனர்.
மாநில கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை செயலாளர் வண்ணை அரங்கநாதன் போட்டிகளை துவக்கிவைத்தார். முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் தலைமை வகித்து பேசுகையில், அழிக்க முடியாத மங்கா புகழ் பெற்றவர் முத்தமிழ்அறிஞர் கலைஞர். பகைவர்களை கண்டு பயப்படக்கூடாது. சனாதனத்தை எதிர்த்து போராடு என போர்முரசு கொட்டியவர். கலைஞர் நூற்றாண்டு விழாவிற்காக கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவைசார்பில் மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தப்படுகிறது.
தங்களது திறமையை வெளிப்படுத்த வந்துள்ள மாணவர்களை பாராட்டுகிறேன். வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமாரியில் வள்ளுவர் சிலை இருக்கும் வரை, சங்கதமிழ் இருக்கும் வரை கலைஞர் புகழ் இருக்கும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் காரைசுரேஷ், மாவட்ட அமைப்பாளர் சண்முகநாதன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ராஜேந்திரன், போஸ், செல்வக்குமார், அபிரகாம், கானாடுகாத்தான் பேரூராட்சி தலைவர் ராதிகா, சுரேஷ்குமார்,நகர அவைத்தலைவர் சன்சுப்பையா, நகர துணை செயலாளர் லட்சுமி, ஒன்றியதுணைசெயலாளர் சத்யாராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.