திருச்செங்கோடு, மே 24: திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில், போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் மோகனப்பிரியா தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் முன்னிலையில், பிரகாஷ் கலை குழுவினர் புதிய பஸ் நிலையத்தில் கலை நிகழ்ச்சியை நடத்தினர். பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம், போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாட்டிய நாடகம், கரகாட்டம் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் பஸ்சில் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துக்கள், வளைவு பகுதிகளில் ஏற்படும் விபத்துக்கள், பஸ் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது, அதிக பாரம் ஏற்றிச்சென்றால் ஏற்படும் விபத்துக்கள், மோட்டார் சைக்கிளில் அதிக நபர்கள் செல்வதால் ஏற்படும் விபத்து, ஹெல்மெட் அணிவதன் அவசியம், நெடுஞ்சாலைகளில் வாகனங்களை முந்திச்செல்லும் போது ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கலைநிகழ்ச்சி மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
0