தொண்டி, நவ.26: தொண்டி அருகே நம்புள்ளை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள், கலைத்திருவிழா போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். தமிழக அரசு பள்ளி மானவர்களை ஊக்குவிக்கும் விதமாக கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது. வட்டார அளவில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கடந்த வாரம் ராமநாதபுரம், கீழக்கரை உள்ளிட்ட பகுதியில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இதில் தொண்டி அருகே உள்ள நம்புதாளை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் தெருக்கூத்து நடனத்தில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்தனர். இவர்களை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.
கலைத்திருவிழா போட்டி அரசு பள்ளி இரண்டாம் இடம்
0